கடவூரில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் பலி

கடவூரில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் பலி
X
பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கரூர் மாவட்டம்,கடவூர் அருகே வலையபட்டியை சேர்ந்தவர் ரமணா (24) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் இவர் நேற்று தனது பைக்கில் சுருமான்பட்டி கிழக்கு பகுதி சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத இருசக்கர மோட்டார் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது அங்கிருந்தவர்கள் ரமாணவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சேர்த்த போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார் அவரது தந்தை கணேசன் கொடுத்த புகாரின் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story