நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் "புகையில்லா போகி பண்டிகை" விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
X
பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாட வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள், துணிப்பை மற்றும் செடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. காற்று மாசுபாடு தவிர்த்து காற்று தரம் மேம்பாடு அடைய மாசில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாட மாணவ, மாணவியர் பேராசிரியர்கள், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பசுமை மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், மற்றும் யூத் ரெட் கிராஸ் சார்பில் "புகையில்லா போகி பண்டிகை" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மு.ராஜேஸ்வரி (பொ) தலைமை வகித்தார்.ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையின் போது டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை மற்றும் மாசுபடுத்தும் பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், தேவையற்ற கழிவுகளை முறையாக அகற்றி, பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாட வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள், துணிப்பை மற்றும் செடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. காற்று மாசுபாடு தவிர்த்து காற்று தரம் மேம்பாடு அடைய மாசில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாட மாணவ, மாணவியர் பேராசிரியர்கள், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய நாமக்கல் மாவட்ட கள பணியாளர், பல்வேறு துறையைச் சார்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன்,பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி, மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அருண் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story