ராசிபுரம் எஸ்.ஆர்.வி.இன்னோவேட்டிவ் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா...

ராசிபுரம் எஸ்.ஆர்.வி.இன்னோவேட்டிவ் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா...
X
ராசிபுரம் எஸ்.ஆர்.வி.இன்னோவேட்டிவ் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. இன்னோவேட்டிவ் சீனியர் செகண்டரி பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தலைவர் ஏ.ராமசாமி தலைமை வகித்தார். பொருளாளர் பி.சுவாமிநாதன் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் துணைத் தலைவர் எம்.குமரவேல், செயலர் எஸ்.செல்வராஜன் இணைச்செயலர் பி.சத்தியமூர்த்தி நிர்வாக அறங்காவலர் ஏ.ஆர்.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயக்குனர் செந்தில் நடேசன் அவர்கள் பங்கேற்று தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கிப் சிறப்புரையாற்றி பேசினார். பள்ளி முதல்வர் டி.ஆர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. எஸ்ஆர்வி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில், ஹைடெக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ப.வள்ளியம்மாள், துணை முதல்வர் ஆர். மணிகண்டன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Next Story