குளித்தலையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு
Kulithalai King 24x7 |10 Jan 2026 9:41 PM IST102 தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கிய கடை உரிமையாளர்
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலகம் கட்டிடம் அருகே உள்ள கட்டிடத்தில் பிரபலமான ஏபிஎஸ் சில்க்ஸ் அண்டு ஹைப்பர் மார்ட் நிறுவனம் புதிதாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் உரிமையாளர் சீனிவாசன் என்பவர் இன்று குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் என மொத்தம் 102 நபர்களை தங்களது கடைக்கு வரவழைத்து பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்களுக்கு வேட்டி துண்டு மற்றும் பெண்களுக்கு சேலைகளை பொங்கல் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஜவுளிகள் வாங்குவதில் 5% தள்ளுபடி கூப்பன்களும் வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
Next Story




