திராவிடப்பொங்கல்" விளையாட்டுப் போட்டி

திராவிடப்பொங்கல்" விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது! ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்! வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் பரிசுகள் வழங்கினார்!
பெரம்பலூர் நகர விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், "திராவிடப்பொங்கல்" விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது! ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்! வெற்றி பெற்றவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் பரிசுகள் வழங்கினார்! பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெரம்பலூர் நகர விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக "திராவிடப் பொங்கல்" விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. கைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம் (ஆண்கள் பிரிவு) கபடி, கோ,கோ, ஓட்டப்பந்தயம் (பெண்கள் பிரிவு) உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, பெரம்பலூர் நகர கழகச் செயலாளரும் - பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.பிரபாகரன் பரிசு வழங்கினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முனைவர்.செல்வ சாம்ராஜ், 9-ஆவது வார்டு உறுப்பினர் ஜெயப்பிரியா மணிவாசகம், நகர மகளிர் அணி அமைப்பாளர் அமுதா, நகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கார்த்திக்கனி ஆகியோர் உள்ளனர்.
Next Story