பொங்கல் பரிசு பொருட்கள்

பொங்கல் பரிசு பொருட்கள்
X
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 50 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான அரிசி வெல்லம், முந்திரி திராட்சை, நெய், மற்றும் அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெரம்பலூர் எச்ஐவி பாசிட்டிவ் நெட்வொர்க், மதர்ஷா ரோடு அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 50 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான அரிசி வெல்லம், முந்திரி திராட்சை, நெய், மற்றும் அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாசிட்டி பீப்பிள் நெட்வொர்க்கின் தலைவர் ஸ்ரீநாதன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண் மருத்துவர் ராஜேஸ்வரி, பெரம்பலூர் ஏ.ஆர். டி மைய ஆலோசகர் தாமஸ் விக்டர், ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை ஆலோசகர் சரவணன் , களப்பணியாளர் செல்வம்பாள் , மற்றும் தன்னார்வலர் அழகேஸ்வரி , சி.எஸ். சி திட்ட பணியாளர்கள் செல்வி ,சேகர், கலா ,செல்லம், மணிகண்டன் ,மற்றும் டி.ஐ.சி திட்ட பணியாளர்கள் ரம்யா, கோகிலா, பவித்ரா, சாந்தி, அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் பழனிவேல் ராஜா அனைவருக்கும் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கினார்.
Next Story