மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மனப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவருமான அப்துல் சமது பேட்டி

X
Tenkasi King 24x7 |11 Jan 2026 3:35 PM ISTமனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மனப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவருமான அப்துல் சமது பேட்டி
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மனப்பாறை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவருமான மாண்புமிகு அப்துல் சமது அவர்கள் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி, கடையநல்லூர் நகர மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், கடையநல்லூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாக உள்ள முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், கடையநல்லூர் அரசு மருத்துவமனையை உடனடியாக தரம் உயர்த்தி, மேம்பட்ட மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும், நீண்ட காலமாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலில், திமுக கூட்டணியில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) ஒதுக்க வேண்டும் என்ற அரசியல் கோரிக்கையும் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் முன்வைக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான், மமக மாவட்டச் செயலாளர் சலீம், தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரகுமான், மாவட்டப் பொருளாளர் முகம்மது பாசித், தலைமைக் செயற்குழு உறுப்பினர் பசீர் ஒலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் கோதர் மைதீன், செய்யது மசூது, மஜீத், சமூகநீதி மாணவர் அணி மாவட்டச் செயலாளர் மஜீத் ஷா, சுற்றுச்சூழல் அணி மாவட்டப் பொருளாளர் சேக்கனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கடையநல்லூர் மமக நகரச் செயலாளர் முகமது அலி, தமுமுக நகரச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், நகர துணைச் செயலாளர் ஹாஜா மைதீன் உள்ளிட்ட தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Next Story
