விசிக குளித்தலை சட்டமன்றத் தொகுதி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

கிருஷ்ணராயபுரம் கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குளித்தலை சட்டமன்றத் தொகுதி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி உட் கட்டமைப்பு, தேர்தல் பணி, பி எல் ஏ 2 ஆகியவை குறித்து ஆலோசனைக் கூட்டம் அய்யர்மலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (எ) மணிவேந்தன், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் குளத்தூர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டத் துணை அமைப்பாளர் வேங்கை மாணிக்கராஜ் , வணிகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக குளித்தலை தொகுதி மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றல் அரசு, பெரம்பலூர் மண்டல செயலாளர் வழக்கறிஞர் ஸ்டாலின், மண்டல துணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் ஆதனூர் பொன்னுசாமி, முத்துக்குமார், சுக்காம்பட்டி ராசப்பா , பொருளாளர் மயில்வாகனன், வேப்பங்குடி வெள்ளைச்சாமி, ஒத்தக்கடை சக்திவேல், சுக்காம்பட்டி தமிழ்ச்செல்வன், மேட்டுப்பட்டி தனபால், கொம்பாடிப்பட்டி பூமணி, சரவணபுரம் நந்தகுமார் உள்ளிட்ட முகாம் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story