திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே ரோட்டில் வந்து கொண்டிருந்த ஆம்னி வேனில் திடீர் புகை பரபரப்பு
Tiruchengode King 24x7 |11 Jan 2026 4:43 PM ISTசேலத்தில் திருமணத்திற்கு வந்துவிட்டு கொடுமுடி நோக்கி சென்ற ஆம்னி வேன் காருக்குள் திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே வரும் போது திடீரென புகை வந்ததால் பரபரப்பு தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்தனர். காருக்குள் இருந்த 5 பெண்கள் 2 குழந்தைகள் பதட்டம்அடைந்தனர்
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே சேலத்தில் இருந்து கொடுமுடி நோக்கிச் சென்ற வந்த ஆம்னி வேனுக்குள்இருந்து திடீர் புகை எழுந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று காருக்குள் இருந்த பெண்களை மீட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பிடிக்காமல் தடுத்தனர். கேஸ் வண்டி என்பதால் திடீரென புகை எழுந்துள்ளது.இதுகுறித்து விசாரித்தபோதுகொடுமுடியைச் சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் இமாம் ஜாபர் சாதிக் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் சேலத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஓட்டுநர், 5 பெண்கள் 2 குழந்தைகள் ஒரு குழுவினரும் மற்றவர்கள் ஒரு டெம்போ ட்ராவலர் வேனிலும் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது டெம்போ ட்ராவலர் வேன் முன்னால் சென்றுவிட பின்னால் அன்வர் அலியின் மருமகன் அக்பர்லி ஓட்டி வந்தஆம்னி வேன் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே வரும்போது ஆம்னி வேனுக்குள் திடீரென புகை எழ ஆரம்பித்தது உடனடியாக காரை அக்பர் அலி ஓரம் கட்டி நிறுத்திய நிலையில் புகையுடன் கார் நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் காரின் கதவுகளை திறந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டு அருகில் அமர வைத்தனர்.அந்த வழியாக வந்த கார் மெக்கானிக் ஒருவர் கேஸ் வெடித்து தீ பரவாமல் தடுக்க கார் கேஸ் குழாயைதுண்டித்தார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக காருக்குள் இருந்து கீழே இறங்கி விடப்பட்ட ஐந்து பெண்கள் இரண்டு குழந்தைகளும் பதட்டம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு நிலைய அலுவர் கரிகாலன்உத்தரவன் பேரில், சிறப்பு உதவிநிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் தீ விபத்து ஏற்பட்டு விடாமல் பாதுகாத்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரை சாய்த்து காருக்குள் புகை வந்த இடம் முழுவதும் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர்.காருக்குள் காரை ஓட்டி வந்த அக்பர் அலி அவரது மனைவி,அன்வர் அலியின் மனைவியும், அக்பர் அலியின் மாமியார் மற்றும் அன்வர் அலியின் தங்கை தம்பி மகள்கள் இரண்டு பேர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்து உள்ளனர். அதில்காருக்குள் புகை எழுந்ததால் அன்வர் அலியின் மனைவி மிகவும் பதட்டமான நிலையில் காணப்பட்டார். உடனடியாகதகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் அவரை ஆசுவாசப் படுத்திய வேறு காரில் அவரை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story


