பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி..

X
Rasipuram King 24x7 |11 Jan 2026 6:14 PM ISTராசிபுரத்தில் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி..
நாமக்கல் மாவட்டம், பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் ஸ்ரீஷா, ஸ்ரீ ஷங்கரி ,சுமித்ரா , சுவிதா, சொர்ணாம்பிகா, சுவட்சனா மற்றும் சுவாதி ஆகியோர், BSc வேளாண்மைத் துறையில் நான்காம் ஆண்டு பாடத் திட்டமான கிராமத்தில் தங்கி நேரடி வேளாண் பயிற்சி பெறும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவிகள் இராசிபுரத்தில் உள்ள இயற்கை வேளாண்மைக்கான களப்பயிற்சி அளிக்கும் வீத லீடர்ஸ் அறக்கட்டளையில் ஒரு நாள் களப்பார்வை மேற்கொண்டு, இயற்கை விவசாயம் சார்ந்த பல்வேறு தகவல்களை நேரடி அனுபவமாக பெற்றனர். இராசிபுரத்தின் கிராம பகுதியில் நெல், மற்றும் மரவள்ளிக்கிழங்கு அதிகபட்சமாக பயிரிடப்படுவதையும் மற்றும் மரவள்ளிக்கிழங்கில் மதிப்பு கூட்டல் செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டுவதையும் நேரடி அனுபவமாக பெற்றனர் கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடாக ஒரு நாள் களப்பயிற்சியை இராசிபுரம் கிளை ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுகந்தி அவர்கள் துவங்கி வைத்தார். அனைத்து மாணவர்களையும் ஒவ்வொரு கிராம விவசாயிகளின் நேரடி தோட்டத்திற்கு களப்பொறுப்பாளர் செல்வம் அவர்கள் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் அவர்கள் அழைத்து சென்று பார்வையிட வைத்தனர். இதன் மூலமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகளின் உழைப்பு, சந்தை வாய்ப்பு, வருமானம்,மற்றும் மேம்பாட்டிற்கான தேவைப்படும் திட்டங்கள் பற்றி களத்தகவல்கள் திரட்டி வருங்காலத்தில் விவசாயித்தை மேம்படுத்தவும் இளைஞர்கள் ஈடுபடவும் அதற்கான திட்டமிடலில் ஈடுபட்டு உள்ளனர்..
Next Story
