சாலையில் நின்ற லாரி மீது கார் மோதியதில் மூவர் படுகாயம்

சாலையில் நின்ற லாரி மீது கார் மோதியதில் மூவர்  படுகாயம்
X
குமாரபாளையம் அருகே சாலையில் நின்ற லாரி மீது கார் மோதியதில் மூவர் படுகாயமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் துர்காசெல்வன், 32. ஓட்டுனர் தொழில் செய்து வருகிறார். இவரும், ஓட்டுனர் தொழில் செய்யும் இவரது நண்பர்கள் சேலம் முஸ்தபா, 27, மதுரை கோவர்த்தனன், 29, ஆகிய மூவரும், துர்காசெல்வனுக்கு சொந்தமான, ஹூண்டாய் வெர்னா காரில், நேற்று முன்தினம் கோவை சென்றனர். இவர்கள் கார், குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, ரெட்டியார் டீக்கடை அருகே, மாலை 05:30 மணியளவில் வந்த போது, எவ்வித சிக்னலும் போடாமல் நின்ற லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லாரி ஓட்டுனர் தலைமறைவானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
Next Story