மணப்பாறை அருகே தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம். வருவாய்துறையினர் நேரில் ஆய்வு
தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம்.
தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம்.
Tiruchirappalli (East) King 24x7 |11 Jan 2026 8:27 PM ISTமணப்பாறை அருகே தொடர் மழையால் இரண்டு வீடுகளில் ஓடுகள் இடிந்து விழுந்து சேதம். வருவாய்துறையினர் நேரில் ஆய்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை அவ்வபோது விட்டு விட்டு பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பொன்னக்கோன்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான ஆலீஸ் சோபியா ராணி (49) என்பவரின் வீட்டின் ஓட்டு வீட்டில் மேல் புறத்தில் இருந்து ஓடுகள் இடிந்து விழுந்தது. தொடர் மழையால் அவரும் அவரது மகனும் அருகில் உள்ள வீட்டில் தூங்கியதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் ஓடுகள் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இதே போல் அருகில் ஜான்பால் என்பவரின் வீட்டின் மேல்புறத்தில் இருந்த ஓடுகள் இடிந்து விழுந்தது. இதனால் இரண்டு வீடுகளும் சேதமடைந்ததை அடுத்து வருவாய்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மிகவும் வறுமையில் உள்ள நிலையில் தாங்கள் வீடு இடிந்து விட்டதால் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும், அரசு வீடு வழங்கிட வேண்டும் என்று ஆலீஸ் சோபியா ராணி அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story


