நாமக்கல் நகர பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா!

நாமக்கல் நகர பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா!
X
மோடி பொங்கல் விழாவில் விதமான கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், உறியடி,சிலம்பம் போட்டிகள், நடைபெற்றன . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
மோடி பொங்கல் விழாவை தமிழகம் முழுவதும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் நாமக்கல் நகர பாஜக சாா்பில் மோடி பொங்கல் விழா நாமக்கல்- சேலம் சாலை முருகன் கோவில் அருகே வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. *நிகழ்ச்சிக்கு நகர தலைவா் தினேஷ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன் முன்னிலை வகித்தாா். கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஜெ.ஜெ.முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புது பானையில் பொங்கல் வைத்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினாா்.பின்னா் பல்வேறு விதமான கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உறியடி , சிலம்பம் போட்டிகள், நடைபெற்றன. இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகுமார், மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு பங்கேற்றனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை மாடுகளுக்கு கோ மாதா பூஜை நடைப்பெற்றது.*விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி தலைவர் ராம் விலாஸ் பிரபு, நகர இளைரணி அணி தலைவர் விக்னேஷ்,நாமக்கல் கிழக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் நிஷாந்த் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பொங்கல் விழாவில் பாஜக கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மாவட்ட, நகர நிா்வாகிகள்,தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Next Story