திராவிடப் பொங்கல் வாலிபால் விளையாட்டுப் போட்டி

திராவிடப் பொங்கல் வாலிபால் விளையாட்டுப் போட்டி
X
ஒன்றிய கழகச் செயலாளரும் - முன்னாள் ஒன்றிய குழுத் தலைவருமான என்.கிருஷ்ணமுர்த்தி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் கொளக்காநத்தம் ஊராட்சியில் திராவிடப் பொங்கல் வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது! ஒன்றிய கழகச் செயலாளரும் - முன்னாள் ஒன்றிய குழுத் தலைவருமான என்.கிருஷ்ணமுர்த்தி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்! ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் கொளக்காநத்தம் ஊராட்சியில் திராவிடப் பொங்கல் வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் 12 வாலிபால் அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். முதல் பரிசு, கொளக்காநத்தம் வாலிபால் அணி வீரர்கள் வெற்றி பெற்று ரூ.10 ஆயிரத்தை தட்டிச் சென்றனர். இரண்டாம் பரிசு, பாடாலூர் வாலிபால் அணி வீரர்கள் வெற்றி பெற்று ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு, ரூ.5 ஆயிரம் பிலிமிசை வாலிபால் அணி குழுவினருக்கும் பணமுடிப்பு மற்றும் சுழற்கோப்பைகளை ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் - முன்னாள் ஒன்றிய குழுத் தலைவருமான என்.கிருஷ்ணமுர்த்தி வழங்கினார். இதில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வ.சுப்ரமணியன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சாம்ராஜ், மனோகர்,வெற்றிவேல், கொளக்காநத்தம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் என்.ராகவன்‌ ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story