பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாவை கல்வியியல் கல்லூரிகளின் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம் ‚

விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை தாங்கி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை கூறினார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினைச் சிறப்பித்து பொங்கல் நல்வாழ்த்துக்களுடன் அறிவுரை வழங்கினார். பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமையுரை ஆற்றினார். அவர்தம் உரையில், ‘இந்தபொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் உங்களின் ஒற்றுமையும், பங்களிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் உங்களின் பண்பட்ட ஒழுக்கத்தினையும் வெளிப்படுத்துகிறது. இந்த இளம் வயதில் உங்களின் ஒழுக்கம், தலைமைப்பண்பு, ஆளுமை, முடிவெடுக்கும் திறன்,பண்பாடு, கலாச்சாரம் போன்றவை வாழ்வினை நெறிப்படுத்தும் அடிப்படையானவிஷங்களாகும். இளமைக் காலத்திலேயே இந்த பண்புகளை உரம் போன்று நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் வளமாக வளர்ந்து தொடர்ந்து முன்னேற முடியும். அதனோடு சமுதாய தீமைகள் உங்களைத் தீண்டாது. உங்கள் நற்செயல்கள் மூலம் அடுத்ததலைமுறையினரும் நற்செயல்களை பின்பற்றுவர். அதன்மூலம் சீர்மிகு சமுதாயம் உருவாகும். மேலும் இந்த கல்லூரிக் காலத்தில் கல்வியை சிரத்தையோடு கற்க வேண்டும். வகுப்பில் கற்கப் போகும் பாடங்களைப் பற்றிய முன்னறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவைகளைப் பின்பற்றும் போது வாழ்வின் உயரங்களை அடைய முடியும். உங்கள் அனைவருக்கம் பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று பேசினார்.விழாவில் அனைத்து துறை மாணவிகளும் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்துச் சிறப்பித்தனர். பின்னர் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பக்திபாடல்கள் மற்றும் விசேஷ பூஜைகள், நடத்தப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டன. நிறைவாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளின் பண்பாடு, கலாச்சாரம், அதே சமயத்தில் மாணவிகளின் பலதரப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டு வரும் விதத்தில் உரியடித்தல், நடனம், ரங்கோலி,கயிறு இழுத்தல், இசை நாற்காலி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவிகள் கிராமப்புற சூழலை வெளிப்படுத்தும் வகையில் குடில் அமைத்திருந்தனர்.விழாவில் பாவை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.ரேவதி, பாவை கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.பி.எஸ்.வெங்கடேசன், அனைத்துத் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
