திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் எம்பி வழங்கினர்..

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் எம்பி வழங்கினர்..
X
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் எம்பி வழங்கினர்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டலூர் கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் 753 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் லேப்டாப் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் அ.யூசுப் கான், தலைமை வகித்தார். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்‌ ராஜேஷ் குமார் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கி மாணவர்களிடத்தில் சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய எம் பி ராஜேஷ்குமார்.. மாணவ மாணவிகள் ஒழுக்கத்தோடு நல்ல சிறந்த அறிவாற்றலோடு செயல்பட வேண்டும், யார் ஒருவர் ஒழுக்கத்தோடு சரியாக செயல்படுகிறோமோ அவர்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, அவர்கள் இந்த நாட்டில் நல்ல வளர்ச்சி உச்சத்திற்கு செல்வார்கள், மனிதனுக்கு கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கம் வரும் ஒழுக்கம் வந்தால் தான் அறிவு சிந்திக்கும் அறிவு சார்ந்த சமுதாயமாக நாம் உருவாக்குவோம், ஆகையால் ஒழுக்கத்தோடு இருங்கள், அது மட்டும் முக்கியமல்ல இரண்டு விஷயங்கள் நீங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் ஒன்று நமது தாய், தந்தையிடம் பாசமாக இருங்கள் அன்பு காட்டுங்கள், அதேபோல நம் சகோதர சகோதரிகள் அவர்களிடத்தில் பாசமாக இருங்கள், மேலும் நமது ஆசிரியர் பேராசிரியர் ஆகியோருக்கு மரியாதை செலுத்துங்கள், அப்பொழுதுதான் நீங்கள் வாழ்க்கையில் மேலும் உயர முடியும், இங்கே மேடையில் உள்ள நாங்கள் இதையெல்லாம் முறையாக பின்பற்றியதால் தான் இன்று இந்த மேடை ஏறி உங்கள் முன் பேசி வருகிறோம், நீங்களும் இதே போல இந்த மேடைக்கு வர வேண்டும் என்ற லட்சியத்தோடு பணியாற்றுங்கள் நன்றாக படித்து அனைவரும் வெற்றி பெற இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் இன்று நாம் பட்டதாரி இளைஞர்களாக உயர்ந்து வருகிறோம் என்றால் அதற்கு திமுக திராவிட மாடல் அரசு அனைத்து வழிகளிலும் மாணவ மாணவிகளுக்கு நல்ல ஊக்கத்தை கொடுத்து வருகிறது. உயர் கல்வி பணிக்கு வெளிநாடுகளுக்கு போவதென்றால் கிட்டத்தட்ட 24 லட்சம் 30 லட்சம் என செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும், இந்த நிலையில் தமிழக அரசு சாதாரண மாணவருக்கு கூட வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக படிப்புக்காக இன்று 24 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை அரசு செலவு செய்யும் நிலையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் இன்று திராவிட மாடல் அரசு உதவி செய்து வருகிறது. அதற்கு நாம் நல்ல கல்வி அறிவை ப் பெற வேண்டும், மேலும் நம்முடைய திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில் நம்முடைய திராவிட மாடல் அரசு தமிழக முதலமைச்சர்கள் இதுவரைக்கும் செய்த தலைவர்கள் வழியில் இன்னும் மெருகேற்றும் விதமாக பல நல்ல திட்டங்களை வகுத்து வருகிறார். கல்லூரி அருகே மினி டைட்டில் பார்க் அமைந்து வருகிறது அதுவும் மாணவர்கள் நலனுக்காகவே எனவே உங்களுடைய சிறந்த நேரத்தை வீணாக்காமல் நன்றாக படித்து பெற்றோர்களையும் பெருமைப்படுத்த வேண்டும் ஆசிரியர்களையும் பெருமைப்படுத்த வேண்டும் இந்த கல்லூரிக்கும் நற்பெயரை எடுத்து தர வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஆத்மா குழு தலைவர் கே.பி. ஜெகநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. ராமசாமி, மற்றும் கல்லூரி இணைப் பேராசிரியர் அரசியல் சார் அறிவியல் துறை மன்ற துணைத் தலைவர் முனைவர் இரா. சிவக்குமார், உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story