குளித்தலையைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் சாதனை

மாநில அளவிலான ஆன்லைன் யோகா போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன் மகன் ராகவன் (வயது 08). தண்ணீர்பள்ளியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் யோகா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி பதஞ்சலி யோகாசனா சார்பில் மாநில அளவிலான ஆன்லைன் யோகா போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்றுள்ளார். அதில் 5 யோகா ஆசனங்களை இரண்டு நிமிடம் வரை தொடர்ந்து செய்து வீடியோ அனுப்பப்பட்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை பெற்ற ராகவனுக்கு இராஜேந்திரம் கிராம பகுதி மக்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story