கரூர்- ஆவின் பாலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
Karur King 24x7 |13 Jan 2026 3:02 PM ISTகரூர்- ஆவின் பாலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கரூர்- ஆவின் பாலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கரூர் மாவட்டம் தோரணகல்பட்டி பகுதியில் செயல்படும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தேசிய பால் பண்ணையில் 2024-25 திட்டத்தில் கரூர் ஒன்றியத்திற்கு 60% திட்ட பங்களிப்பும் மற்றும் 40% ஒன்றிய பங்களிப்புடன் செலவுகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த திட்ட நிதி 28.23 லட்சம், ஒன்றிய நிதியின் 18.82 லட்சம் என மொத்தம் 47.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய நுண்ணுயிரியல் ஆய்வக கட்டடத்தை பால் மற்றும் பால் உட்புறத்தில் பரிசோதனை மேற்கொள்ள தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. புதிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் ஐந்து நபர்கள் தேர்வு செய்து பரிசுகளும், சிறந்த பால் கறவை செய்யும்போது பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகள் தேர்வு செய்து அதன் உரிமையாளர்களுக்கு 9 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மாவட்ட துணை பதிவாளர் பால்வளம் பவணந்தி பொது மேலாளர் பிரவீனா மற்றும் பால்வளத்துறை பணியாளர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






