போக்குவரத்து துறை அமைச்சர் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் சமத்துவ பொங்கல் விழா போக்குவரத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு
பெரம்பலூர் மற்றும் குன்னம் அரசு போக்குவரத்துக் கழக பனிமனைகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது! போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சிவசங்கர் கலந்து கொண்டு தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புத்தாடை வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ .ஜெகதீசன் - எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்! ----------------------------------------- பெரம்பலூர் மற்றும் குன்னம் அரசு போக்குவரத்துக் கழக பனிமனைகளில் திராவிட சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், முதல் முறையாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் சீரிய முயற்சியில் பொங்கலுக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் யூனியன் பாகுபாடு இல்லாமல், அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்கள், பேருந்து கேன்வாஸர் உள்ளிட்ட அனைவருக்கும் புத்தாடை வழங்கி அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொங்கல் வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொது மேலாளர் டி.சதீஸ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், கோட்ட மேலாளர் ராம்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.ராஜ்குமார், தி.மதியழகன், சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், பெரம்பலூர் கோட்ட துணை மேலாளர் (தொழில்நுட்பம்) எம்.எஸ்.ஜி.புகழேந்தி ராஜ், பெரம்பலூர் கிளை மேலாளர் தண்டாயுதபாணி, நகர்மன்ற துணைத் தலைவர் து.ஆதவன், நகர்மன்ற உறுப்பினர் சித்தார்த்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story