தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொங்கல் விழா

X
Tenkasi King 24x7 |14 Jan 2026 3:59 PM ISTமாவட்ட நிர்வாகம் சார்பில் பொங்கல் விழா
சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் ஊராட்சி, புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொங்கல் விழா நடந்தது இதில் கலெக்டர் கமல்கிஷோர் தலைமை வகித்து மாட்டு வண்டி ஒட்டினார், தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் ராஜா (சங்கரன்கோவில்), சதன் திருமலைகுமார் (வாசுதேவநல்லூர்) ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா 2026 நடைபெற்றது. தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களப்பாகுளம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கலிடும் நிகழ்வு, உறியடிக்கும் நிகழ்வு, கோலப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள். தொடர்ந்து, புளியங்குடி ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை இரண்டு சக்கரம் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் அமர வைத்து மேளதாளங்களுடன் சமத்துவ பொங்கல் விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள். இவ்விழாவில், சிலம்பாட்டம் கோலப்போட்டி பரதம், தடகளப் போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.
Next Story
