திருச்செங்கோட்டில் தமிழ்நாடு வெற்றி கழகம் அறிவித்திருந்த படி கோலப் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்நாடு வெற்றி கழக கொடியை வரைந்திருந்த பெண்ணுக்கு திமுகவினர் மிரட்டல்

திருச்செங்கோட்டில் தமிழ்நாடு வெற்றி கழகம் அறிவித்திருந்த படி கோலப் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்நாடு வெற்றி கழக கொடியை வரைந்திருந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுக்கு திமுகவினர் மிரட்டல்பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் பேட்டி
திருச்செங்கோட்டில் தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி தமிழ்நாடு வெற்றிகழகத்தின் சார்பில்வெற்றி பொங்கல் விழா மற்றும் பரிசு மழை என கோலப்போட்டி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது.இதில் கலந்து கொள்பவர்கள் வாசலில்கோலமிடும் போது இது டி வி கே பொங்கல், பொங்கலோ பொங்கல் வெற்றி பொங்கல், தைப்பொங்கல், இது தளபதி பொங்கல், ஹேப்பி டி வி கே பொங்கல், என இந்த நாலு வாசகங்களை ஒரு வாசகத்தை கோலத்தின் அருகில் எழுதினால் பரிசு வழங்கப்படும் எனவும் அவ்வாறு எழுதப்பட்ட கோலத்தை செல்பி எடுத்து அனுப்பும் அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் நிச்சய பரிசு காத்திருக்கிறது எனவும் கோலத்தில் வெற்றி கோஷமிடுங்கள் வெற்றிப் பொங்கலை தளபதி விஜயுடன் கொண்டாடுங்கள் பரிசும் மலையில் நனைந்திடுங்கள் எனவும்பரிசு 25 மற்றும் 26 ஆம் தேதி அன்று வழங்கப்படும் என திருச்செங்கோடு மேற்கு நகர தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதனை whatsapp மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் இடும்போது இது டிவிகே பொங்கல் என பெரும்பான்மையாகவும் டிவிகேவை சேர்ந்தவர்கள்தங்களது வீடுகளில் தவெக கொடி யானை படம் விஜயின் உருவம் போன்றவற்றை வரைந்து இது டிவி கே பொங்கல் என எழுதி இருந்தனர். இவ்வாறு ஏகே இ ஒன்றாவது தெருவை சேர்ந்தஜெயலட்சுமி என்பவர் போட்டிருந்த டிவி கே கொடியுடன் கூடிய கோலத்தை பார்த்த சில திமுகவினர் ஏன் இந்த கோலம் வரைந்து இருக்கிறீர்கள் என கேட்டதாகவும் போட்டி அறிவித்திருக்கிறார்கள் அதனால் வரைந்தோம் என பெண்கள் கூறியதாகவும் யார் போட்டி அறிவித்தாலும் கோலம் போட்டு விடுவீர்களா? இதை அழித்து விடுங்கள் என கூறியதாகவும் கோலத்தை வேண்டுமானால் அளித்து விடலாம் எங்கள் மனதில் இருப்பதை அழித்துவிட முடியாது என கூறியதாகவும் தெரிவித்தனர்.இன்னும் சிலர் இதில் கட்சி எதுவும் இல்லை கோலப்போட்டி என அறிவித்ததால் எல்லோரும் கோலம் போட்டு இருக்கிறோமே தவிர நாங்கள் எல்லோரும் டி வி கே காரர்கள் அல்ல எனவும்தேர்தல் வரும் போதுஇரண்டு தரப்பும் தான் பரிசுப் பொருட்கள் கொடுக்கிறார்கள் நாங்கள் எங்கள் மனதில் இருக்கிறவர்களுக்கு தான் ஓட்டு போடுகிறோமே தவிர பரிசு கொடுத்தார்கள் என்பதற்காக யாருக்கும் போடுவதில்லை வழக்கமாக ஜிஆர்டி நிறுவனத்தினர் தான் இவ்வாறு கோல போட்டி நடத்துவார்கள் இந்த முறை தாவே காவலர் நடத்துகிறார்கள் என கருதி நிறைய பேர் கோலமிட்டு இருக்கிறோம் என கூறினார்கள்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிரட்டலுக்குள்ளான ஜெயலட்சுமி என்ற பெண் கூறியதாவது நான் ஏ கே இ 1 வது தெருவில் வசித்து வருகிறேன்.இன்று டி வி கே சார்பில் கோலப்போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது அதனை ஒட்டி எங்கள் பகுதியில் நிறைய பேர் கோலம் போட்டு செல்பி எடுத்து அவர்களுக்கு அனுப்பி இருந்தோம் அது போல் நான் தவெ க கொடியைவரைந்து கோலம் போட்டு இருந்தேன். எங்களது 12வார்டு ஆகும் திமுக துணை சேர்மன் வார்டு ஆனால் இதற்கு துணை சேர்மன் எதுவும் சொல்லவில்லை எ எங்கள் பகுதியில் இதனைப் பார்த்த அவருக்கு கீழ் உள்ள சில திமுகவினர் எதற்காக இந்த கோலம் போட்டு இருக்கிறீர்கள் என மிரட்டும் தொனியில் கேட்டனர். யார் போட்டி அறிவித்தாலும் போட்டு விடுவீர்களா என கேட்டனர் நீங்கள் அறிவித்தாலும் போடுவோம் என சொன்னேன் கோலத்தை அழித்து விடுங்கள் என கூறினார்கள் கோலத்தை வேண்டுமானால் அழித்து விடலாம் என் மனதில் இருப்பதை அழிக்க முடியாது என அவர்களிடம் கூறினேன் எதுவும் சொல்லாமல் சென்று விட்டனர் என கூறினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்செங்கோடு நகர தவெக பொருளாளர் கார்த்தி என்பவர் கூறியதாவது தவெக சார்பில் கோலம் போட்டி அறிவித்திருந்தோம்.இதில் ஆர்வமுள்ள பலரும் கலந்து கொண்டு எங்கள் அறிவிப்புக்கு ஏற்ப கோணத்தின் முன்னால் இது தளபதி பொங்கல் ஹேப்பி டிவி கே பொங்கல் இது டிவி கே பொங்கல் என எழுதி போட்டோ எடுத்து அனுப்பி கொண்டிருந்தனர் அப்போது சில திமுகவினர் வந்து மிரட்டல் விடும் தொனியில் கோலத்தை அழித்துவிடுமாறு கூறினர் இதிலிருந்து அவர்கள் எங்களை கண்டு பயப்படுவது தெரிகிறது திமுகவுக்கு நேரடி எதிரிதமிழக வெற்றி கழகம் தான் என்பது வெளிப்படையாக தெரிய வருகிறது வரும் 2026 தேர்தலில் தமிழ்நாடு வெற்றி கழகம் வெற்றி பெறுவது உறுதி தளபதி முதல்வராவது உறுதி என கூறினார். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story