ராசிபுரத்தில் பழனி பாதயாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம்..

ராசிபுரத்தில் பழனி பாதயாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம்..
X
ராசிபுரத்தில் பழனி பாதயாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம்..
தமிழகம் முழுவதும் தை மாதம் பிறப்பில் முருகர் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து பல்வேறு முருக பக்தர்கள் பாதயாத்திரை பழனிக்கு மற்றும் ஆறுபடை முருகர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.. அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் ராசிபுரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாலை அணிந்து தை மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவு முதலே முருகனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்து பாதயாத்திரையாக செல்வார்கள், அதேபோல் ஏராளமான முருக பக்தர்கள் ராசிபுரம், மற்றும் சுற்றியுள்ள பட்டணம், புதுப்பட்டி, சிங்களாந்தபுரம், மெட்டாலா, மங்களபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என பக்தி முழக்கங்கள் எழுப்பி சென்றனர். மேலும் முருகர் வேடமடைந்தும், முருகனின் ஆண்டி கோலம் வேடமிட்டு சென்றனர். இவர்களுக்கு அஜித்குமார் நற்பணி இயக்கம் ராசிபுரம் நகர தலைமை இளைஞரணி சார்பில் ஐந்தாம் ஆண்டாக கூல் ட்ரிங்ஸ், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பொருட்களும், மற்றும் இதேபோல் வெற்றிவேல் மேட்டுத்தெரு நண்பர்கள் குழு , சிவனடியார்கள் கூட்டமைப்பு, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அன்னதானம், பால், பிஸ்கட், சுக்கு காபி, சுக்கு பால், மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.
Next Story