இராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பொங்கல் திருவிழா திருப்பலி பூஜை பங்குத் தந்தை லியோ மரியோ ஜோசப் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

உலகத்தமிழர் அனைவருக்கும் உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் திருநாள் உங்களின் இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கிடவும், நம்பிக்கையைப் பெருக்கி, ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்க வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
ராணிப்பேட்டை ஜன.-16 இராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பொங்கல் திருவிழா திருப்பலி பூஜை பங்குத் தந்தை லியோ மரியோ ஜோசப் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது. உலகத்தமிழர் அனைவருக்கும் உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் திருநாள் உங்களின் இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கிடவும், நம்பிக்கையைப் பெருக்கி, ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்க வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன். மேலும் நம் இல்லங்களில் சமத்துவம் பொங்கட்டும். நம் சகோதரர்கள் குறிப்பாக விவசாயிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருவிழா நல் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். விழாவில் ராணிப்பேட்டை, காரை, அவரக்கரை, வாலாஜா, அணைக்கட்டு முகாம், மற்றும் அம்மூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாடல் குழு தலைவர் லியோ தலைமையில் பாடல் குழுவினர் சிறப்பு பாடல்களை பாடினார்கள். முடிவில் வேதியர் டேவிட் நன்றி கூறினார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
Next Story