திருச்செங்கோட்டில் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் கோழி பிடிக்கும் போட்டி நடைபெற்றது இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமான கலந்து கொண்டனர்
Tiruchengode King 24x7 |16 Jan 2026 7:12 PM ISTதமிழகத்தின் அலங்காநல்லூர், பாலமேடு அவனியாபுரம் பகுதிகளில் இளைஞர்கள் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களும் குழந்தைகளோ கலந்து கொள்ள முடியாது இதனை கருத்தில் கொண்டு பெண்கள் குழந்தைகளுக்காக திருச்சங்கோடு நந்தவனத் தெரு பகுதியில் நவீன ஜல்லிக்கட்டுநடத்தப்பட்டது
தைப்பொங்கல் திருநாளை ஒட்டி தமிழகத்தின் அலங்காநல்லூர், பாலமேடு அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீர இளைஞர்கள் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இது போல் நடந்து வந்த போதிலும் இதில் பெண்களும் குழந்தைகளோ கலந்து கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு பெண்களும் குழந்தைகளும் கலந்து கொள்ளும் வகையில் நவீன ஜல்லிக்கட்டு என்ற ஒரு போட்டியை திருச்செங்கோடு நந்தவன தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் உருவாக்கினர். இதில் ஒரு பெரிய வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் ஒரு பெண்ணின் அல்லது குழந்தையின் கண்களைக் கட்டி ஒரு காலில் கயிற்றின் ஒரு முனையையும் மற்றொரு முனையை கோழியின் கால்களிலும் கட்டிவிடுவார்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு கோழியை கைகளால் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்து இந்த போட்டிகள் நடந்தது. கடந்த 17 ஆண்டுகளாக இந்த போட்டிகளை தொடர்ந்து இளைஞர் மன்றத்தினர் நடத்தி வருகின்றனர். இந்த போட்டியில் நிஷா, கனிஷ்கா, அமித், இலாஹிஆகியோர் கோழியைப் பிடித்து முறையே ஆண்கள் பிரிவில் இருவரும் பெண்கள் பிரிவில் இருவரும் முதல் மற்றும் இரண்டாவது பரிசினை வென்றனர். இதில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு கோழி பிடித்தனர் கோழியை தவறவிட்டவர்கள் வட்டத்துக்கு வெளியே வந்தவர்கள் கோழியை கைகளால் கடைசி வரை தேடிக் கொண்டே இருந்தவர்கள் என பலரும் பல்வேறு விதமாக விளையாடியது பார்வையாளராக வந்திருந்த மக்களை உற்சாகப் படுத்தியது.
Next Story


