மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம் ஆகியவற்றை ஒட்டி திருச்செங்கோட்டில் நகரின் பல்வேறு பகுதிகளில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது
Tiruchengode King 24x7 |16 Jan 2026 10:24 PM ISTவழுக்கு மரம் ஏறும் போட்டி திருச்செங்கோடு நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது நாகர்பள்ளம் விளையாட்டுத் திடல் பகுதி,சட்டயம் புதூர்கோவில் திடல் மற்றும் குமரமங்கலம் பகுதிகளில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரத்தில் ஏற போட்டி போட்டனர்
தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான தைப்பொங்கல் திருநாளை ஒட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி உறியடித்தல் வழுக்கு மரம் ஏறுதல் கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியான வழுக்கு மரம் ஏறும் போட்டி திருச்செங்கோடு நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது நாகர்பள்ளம் விளையாட்டுத் திடல் பகுதி,சட்டயம் புதூர்கோவில் திடல் மற்றும் குமரமங்கலம் பகுதிகளில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு வழுக்கு மரத்தில் ஏற போட்டி போட்டனர்.வெந்தயம் உளுந்து கிரீஸ் என வழுவழுப்பான பொருள்கள் தடவப்பட்டு ஊறவைக்கப்பட்ட 25 அடி உயரம் கொண்ட மூங்கில் மரங்களில் இளைஞர்கள் ஏறினர் அவர்களை ஏற விடாமல் தடுக்க சுற்றி நின்று தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது அதையும் தாண்டி சில இளைஞர்கள் லாவகமாக ஏறி மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருளை எடுத்து வந்து வெற்றி பெற்றனர்.நாகர் பள்ளத்தில் நடந்த வழுக்கு மரம் ஏறும் போட்டியில்12 அணிகள் கலந்து கொண்டன இதில் ஜெனுன் பாய்ஸ் அணிவெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணிக்கு திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அறிவித்தபடி 5001 ரூபாய்பரிசாக வழங்கப்பட்டது.இதே போல் குமரமங்கலம் பகுதியில் நடந்த போட்டியில்பெரியவர்களுக்காக நடைபெற்ற 25 அடி உயர வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 5-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இளைஞர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டியிட்டதில் களம் அனல் பறந்தது. போட்டியின் இறுதியில் லோகேஷ் மற்றும் திரு ஆகியோர் அடங்கிய அணி வெற்றி வாகை சூடி பரிசுகளைத் தட்டிச் சென்றது.
Next Story


