நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் திருவள்ளுவர் தின கொண்டாட்டம்! நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு !

X
Namakkal King 24x7 |16 Jan 2026 10:53 PM ISTதிருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற சுதர்சன், நிதர்சனா, லத்திகா உள்ளிட்ட மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில்,நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் எம்எல்ஏ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நாமக்கல் கவிஞர் கவிதைகள் புத்தகங்களை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசால் திருவள்ளுவர் தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், மணிக்கூண்டு அருகில், திருவள்ளுவர் தினவிழா நடைபெற்றது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரகோத்தமன் வரவேற்றார்.நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்று,திருவள்ளுவர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற சுதர்சன், நிதர்சனா, லத்திகா உள்ளிட்ட மாணவ மாணவிகளுக்கு உலக சமுதாய சேவா சங்கத்தின் சேலம் மண்டல தலைவர் அருள்நிதி உழவன் ம.தங்கவேலு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை வழங்கினார், * மதிப்புறு தலைவர் வ.சத்தியமூர்த்தி அனைவருக்கும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பாடல்கள் என்ற புத்தகம் நன்கொடையாக வழங்கினார். அந்த புத்தகத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினர் பேசும் போது... நாமக்கல் நகரில் திருவள்ளூவர் சிலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அதற்கான முழு முயற்சியும் நான் மேற்கொள்கிறேன் எனவும் அதற்கான ட்ரஸ்ட் அமைக்க உறுதியளித்தார்.* பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் டால்பின் பாலன், புலவர்கள் துரைசாமி, மருதமுத்து, ஜெயபால், கண்ணன், நாச்சிமுத்து, பெரியசாமி, பெரியசாமி, சிவலிங்கம், பழனியாண்டி, பிரபாகரன், ராதாகிருஷ்ணன், மதியழகன், ராஜசேகரன், அய்யாசாமி, மாணிக்கம், பேராசிரியர் முத்துசாமி,இராமசாமி உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார்.
Next Story
