கே.எஸ்.மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்.

கே.எஸ்.மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்.
X
பரமத்தி வேலூர் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கே எஸ் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்.
பரமத்தி வேலூர், ஜன.17: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திமுக கட்சி அலுவலகத்தில் மருத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பரமத்திவேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே எஸ் மூர்த்தி தலைமை வகித்தார். வேலூர் பேரூர் கழகச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், அவைத்தலைவர் மதியழகன் மற்றும் மாவட்டம்,பேரூர்,ஒன்றிய,கிளை, இளைஞரணி மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story