எம்ஜிஆரின் பிறந்த நாள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி ராசிபுரம் அதிமுக சார்பில் கொண்டாட்டம்!

X
Rasipuram King 24x7 |17 Jan 2026 7:51 PM ISTஎம்ஜிஆரின் பிறந்த நாள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி ராசிபுரம் அதிமுக சார்பில் கொண்டாட்டம்!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் (ஜனவரி 17) கொண்டாடப் படுகிறது. அஇஅதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உத்தரவின் பெயரில் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக நகர கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி புகழ் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதேபோல் ராசிபுரம் 27 வார்டுகளிலும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு பிறந்த நாளை முன்னிட்டு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தி அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி, வழக்கறிஞர்கள் கே. பி. சுரேஷ், பிரபு, பூபதி, ராதா சந்திரசேகர், முன்னாள் நகர துணை தலைவர் வெங்கடாசலம், முன்னாள் கவுன்சிலர் MGR இளைஞரணி,நகர செயலாளர் ஆர் பி. சீனிவாசன், கவுன்சிலர் மகாலட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் வாசுதேவன், ஸ்ரீதர், அருணாச்சலம், அண்ணா தொழிற்சங்கம் ஆட்டோ சீனிவாசன், பார்த்திபன், மகளிர் அணி ஹேமலதா, மகேஸ்வரி, ஷகிலா, வார்டு செயலாளர்கள் சீனிவாசன், செல்லமுத்து, சரவணன், வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story
