வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

X
Komarapalayam King 24x7 |17 Jan 2026 8:05 PM ISTகுமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்டது. .
குமாரபாளையம், ராஜராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார், 41. போகியதிற்கு குடியிருந்து கொண்டு, தங்கியிருக்கும் வீட்டிலேயே டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருகிறார். செந்தில்குமார் தனது குடும்பத்துடன் கடந்த ஜன. 14ல், மகாபலிபுரம், மேல்மருவத்தூர் தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு ஆன்மீக சுற்றுலாவிற்கு சென்றுள்ளார் நேற்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் செந்தில்குமாரின் இளைய மகன் சரவணவேலின் நண்பர்கள், வீடு திறந்து இருப்பதை பார்த்து வந்து, சரவணவேலை கூப்பிட்டனர். யாரும் வராதாலும் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறக் கிடைப்பதை பார்த்து பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வீரி செட்டியண்ணன் வசம் சொல்லி, செந்தில்குமாருக்கு போன் மூலமாக தகவல் சொன்னார். செந்தில்குமார் 100க்கு அழைத்து புகார் சொல்ல, குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகிறார்கள். பணம் 60 ஆயிரம் என கூறப்படுகிறது.
Next Story
