அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது

X
Komarapalayam King 24x7 |17 Jan 2026 8:22 PM ISTகுமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது செய்யபட்டார்.
குமாரபாளையம் பகுதியில் அதிக விலைக்கு மது விற்பதாக தகவல் கிடைத்தது. குமாரபாளையம் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். காவேரி நகர், காந்தியடிகள் தெருவில் மது விற்பது அறிந்து அங்கு போலீசார் சென்றனர். அங்கு ஒருவர் அதிக விலைக்கு மது விற்பதை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர் பெயர் முருகன், 42 என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்த போலீசார், இவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story
