சவுண்டம்மன் திருவிழா அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
Komarapalayam King 24x7 |17 Jan 2026 8:33 PM ISTகுமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார வழிபாடுகள் நடந்தது.
குமாரபாளையம் சேலம் சாலை ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஜன. 12ல் சுவாமி வீட்டார் அழைப்பு, ஜன. 13ல் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது.நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து சாமுண்டி அழைப்பு, பெரிய பொங்கல் பூஜை நடந்தது. நேற்று மாலை மகா ஜோதி அழைத்தல் வைபவம் நடந்தது. மேலும் அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று அம்மன் கோவிலிலிருந்து மஞ்சள் நீராட்டு மெரவணை,நடந்தது. வாண வேடிக்கையும் நடந்தது.
Next Story


