புதன்சந்தையில் திமுக சார்பாக கலைஞர் கல்வி உதவி தொகை வழங்கல்!

புதன்சந்தையில் திமுக சார்பாக கலைஞர் கல்வி உதவி தொகை வழங்கல்!
X
புதுச்சத்திரம் வடக்கு மற்றும் தெற்கு திமுக நிர்வாகிகள் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் 174 வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகையை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமாா் எம்பி வழங்கினார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வழிகாட்டுதல் பேரில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் குடும்பத்தில் பயிலும் மாணவ மாணவியா்களுக்கு கலைஞா் நினைவு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம் (104 பேர்) மற்றும் தெற்கு ஒன்றியம் (70 பேர்) கிளை கழகத்தில் தற்போது பொறுப்பில் உள்ள அவைத் தலைவர். துணை செயலாளர், பொருளாளர் மற்றும் ஒன்றிய அணியின் அமைப்பாளர் / துணை அமைப்பாளர் / தலைவர் மற்றும் தொடர்ந்து கழகத்தில் இரண்டு உறுப்பினர் அட்டைக்கு குறையாமல் உள்ளவர்களின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் 174 வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமாா் எம்பி., நிதியுதவியை மாணவ மாணவியா்களுக்கு வழங்கிப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் எம்எல்ஏ.,புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்பி.கௌதம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜெயபிரகாஷ்,சார்பு அணி அமைப்பாளர்கள் பொன்.சித்தார்த், கிருபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story