நாமக்கல்லில் தவெக ஐடி விங் சார்பில் நடைபெற்ற கோலப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற இளம்பெண்கள்!

X
Namakkal King 24x7 |18 Jan 2026 1:31 PM ISTநாமக்கல் மாநகராட்சி, (19வது வார்டு) பொய்யேரிக்கரையில் தவெக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது, இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாழ்த்துக்களுடன்,நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.என். சதிஷ் தலைமையில் காணும் பொங்கலை முன்னிட்டு நாமக்கல் மாநகராட்சி பொய்யேரிக்கரை 19வது வார்டில் தவெக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது, இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கே.சுந்தர்ராஜ் முன்னிலை வகித்து கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்த நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் சக்தி சதிஷ்,மாவட்ட பொருளாளர் பாலா, மாவட்ட துணை செயலாளர் மோகன், மாவட்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சதீஷ், தமிழரசன் மற்றும் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இப்போட்டியில், ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர், அனைவருக்கும் ஆறுதல் பரிசும், முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. இளம் வயது பெண்கள் அதிகளவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை 19-வது வார்டு செயலாளர் பாலமுருகன் மற்றும் தவெக தொண்டர்கள் செய்து இருந்தனர்.
Next Story
