தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் அவரது சக விவசாயிகள் சிலரை சட்ட விரோதமாக கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்துஉண்ணாவிரதப் போராட்டம்

X
Tiruchengode King 24x7 |18 Jan 2026 4:29 PM ISTதமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் அவரது சக விவசாயிகள் சிலரை சட்ட விரோதமாக கைது செய்ததை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் சங்கவிவசாயிகள் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள்ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமியை கடந்த 14ஆம் தேதி கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியதால் இரவு நேரத்தில் காரில் வரும்போது அவரையும் அவரது சகாக்கள் சிலரையும் போலீசார் சட்ட விரோதமாககைது செய்தனர். இதனை கண்டித்தும்கைது செய்யப்பட்ட அனைவரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகளும் தமிழ்நாடு கறிக்கோழி பண்ணையாளர்களும் இன்று திருச்செங்கோடு அருகே உள்ள பிலிக்கல் மேடு பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈசன் முருக சாமியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அவரது சகாக்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்தினர். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமியையும் அவருடன் வந்த 12 விவசாயிகளையும் தமிழக அரசு சட்டவிரோதமாக கைது செய்துள்ளது. இதனை கண்டித்து நாங்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் நிபந்தனையற்ற விடுதலையை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜெயமணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து கரும்பு விவசாய அணி தங்கவேல், பள்ளிபாளையம் ஒன்றியம் மகேஸ்வரன், கறிக்கோழி பண்ணை அணி கனகராஜ் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்
Next Story
