நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது, எம்.பி கே ஆர்.என்.ராஜேஷ்குமார் பங்கேற்பு.த

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் ஏராளமான பரிசுகளை அள்ளிச்சென்றனர் .
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே கைக்காட்டியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியினை நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு விதிமுறைகள் குறித்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர், ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் மாடாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் நாமக்கல்,மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் போட்டியில் பங்கேற்றுள்ளனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும் மாடுகளின் திமில்களை பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கு எம்.பி.ராஜேஷ்குமார் சைக்கிள், பேன், ரொக்கப்பணம், சில்வர் பாத்திரங்களை பரிசாக வழங்கி உற்சாப்படுத்தினார் மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் வீரர்களுக்கும், காளைகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் மேலும் எந்த விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்
Next Story