சுரண்டையை கண்டுகொள்ளாத போக்குவரத்து கழகம் சுரண்டையில் இருந்து பொங்கல் விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்படததால் பொது மக்கள் கடும் அவதி

சுரண்டையை கண்டுகொள்ளாத போக்குவரத்து கழகம்         சுரண்டையில் இருந்து பொங்கல் விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்படததால் பொது மக்கள் கடும் அவதி
X
சுரண்டையை கண்டுகொள்ளாத போக்குவரத்து கழகம் சுரண்டையில் இருந்து பொங்கல் விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்படததால் பொது மக்கள் கடும் அவதி
சுரண்டையில் இருந்து பொங்கல் விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்படததால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர், தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் சென்னை, கோவை, பெங்களூர், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் தீபாவளி, பொங்கல், பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வர். அவர்கள் ஊருக்கு வந்து விட்டு திரும்பி செல்ல வசதியாக கடந்த 10 வருடங்களாக அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மூலம் முன்பதிவு இல்லாத சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இவ்வருடமும் முன்பதிவு இல்லாத சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் எனவும் அரசு போக்குவரத்து கழக ஆன்லைன் முன்பதிவு அட்டவணையில் சுரண்டை - சென்னை, சுரண்டை - பெங்களூர், சுரண்டை - கோவை ஆகிய வழித்தடங்களை சேர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர் ‌ ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படாததுடன் ஆன்லைன் முன்பதிவு அட்டவணையிலும் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே சுரண்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விரைவு போக்குவரத்து கழக பேரூந்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுவதில்லை கோவைக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது அதுவும் பண்டிகை நாட்களில் விரைவில் நிரம்பிவிடுவதால் நேரடி பயணம் செய்ய முடியாமல் சிரமம் அடைந்தனர் இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடிவிட்டு சென்னை மற்றும் கோவைக்கு திரும்பி செல்ல வழக்கம் போல் சிறப்பு பஸ்கள் இயக்கபடும் என எதிர்பார்த்து வந்த 300க்கும் அதிகமான பயணிகள் குறிப்பாக பெண்களும் மாணவிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் போக்குவரத்து கழகம் மூலம் தென்காசி, திருநெல்வேலி, சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை ஆகவே வரும் கோடை விடுமுறை நாட்களில் சுரண்டை பகுதி மக்கள் நலன் கருதி சென்னை மற்றும் கோவையில் இருந்து சுரண்டைக்கும், சுரண்டையில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கும் ஆன்லைன் முன்பதிவு அட்டவணையில் சேர்க்கவும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story