புதுக்கோட்டையில் வீர முத்தரையர் சங்கம்கூட்டம்

புதுக்கோட்டையில் வீர முத்தரையர் சங்கம் சார்பில் சி கருப்பையா தலைமையில் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் வீர முத்தரையர் சங்கம் சார்பில் சி கருப்பையா தலைமையில் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வீர முத்தரையர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நிறுவனத்தலைவர் சி. கருப்பையா கீழ்க்கண்ட தீர்மானங்களை வெளியிட்டு பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய முத்தரையர் சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10. 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் முத்தரையர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும், புதுக்கோட்டையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலையை அமைத்து தர வேண்டும் என்றும், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை சூட்ட மத்திய மாநில அரசுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை வைத்தனர்.
Next Story