கரூர்-வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சிறுதானியங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாகனத்தை வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Karur King 24x7 |19 Jan 2026 4:23 PM ISTகரூர்-வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சிறுதானியங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாகனத்தை வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கரூர்-வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சிறுதானியங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாகனத்தை வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம் தாந்தோணிமலை வேளாண்மைதுறை அலுவலக வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை பரப்பும் வகையில், சாலை விழிப்புணர்வு வாகனத்தை வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். கரூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், வேளாண் உற்பத்தி மகசூலை பெருக்கவும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைச்சலை பெருக்க ஒன்றிய அரசு நிதி உதவியுடன் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்சமயம் அரிசி உணவே பிரதானமாக உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்துக் கொண்ட கொண்ட கம்பு, ராகி, சோளம், வரகு, திணை, சாமை மற்றும் குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் மனித ஆரோக்கியம் மேம்படுகிறது. எனவே ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடவும் அரசு முயற்சிகள் எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை பரப்பும் பொருட்டு சாலை விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) பெ. ராமசாமி, வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) கோவிந்தசாமி, வேளாண்மை உதவி இயக்குநர், போ.பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Next Story


