நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டாக்டர் பி.வி.செந்தில் நியமனம்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டாக்டர் பி.வி.செந்தில் நியமனம்.
X
நாமக்கல் காவேரி ஃபீட்ஸ், காவேரிஸ் பயோ புரோட்டீன்ஸ் பிரைவேட் லிமிடெட், நிர்வாக இயக்குநராக இருந்து வரும் இவர், தொழில்முறையில் பல வர்த்தக சங்கங்களின் உறுப்பினர் மற்றும் நிர்வாகம் பொறுப்புகளில் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டாக்டர் பி.வி.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.சுதந்திரப் போராட்ட வீரர், காமராஜர் ஆட்சி காலத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர், இந்திய அரசியலமைப்புச் சபை உறுப்பினரான இவருடைய தாத்தா டி.எம்.காளியண்ணன் வழியில்,கொங்கு நாட்டு வெளாளர் சங்கத்தின் தலைவர்,தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு உருவாக காரணமாக இருந்தவர், மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தவர், விவசாயிகளின் கோழிப்பண்ணைத் தொழிலின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என பல்வேறு பதவிகளை பெற்று வந்த இவரது தந்தை வெங்கடாசலம் வழியில்
டாக்டர் பி.வி.செந்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் கடந்த 18 ஆண்டுகளாக களப்பணியாளராக பணியாற்றியுள்ளார்.கடந்த 2008 முதல் 2012 வரை இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினர்.தேர்ந்தெடுக்கப்பட்ட நாமக்கல் லோக்சபா இளைஞர் காங்கிரஸ் தலைவர் (2014-18)தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி(ஓபிசி) மாநில துணைத் தலைவர்(2019-முதல்), தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் - நாமக்கல் லோக்சபா இளைஞர் காங்கிரஸ் குழு (2012-14), 2014 முதல் மாநில செய்தித் தொடர்பாளர் என பல்வேறு பொறுப்புகள் பெற்று அதில் திறம்பட செயலாற்றி வந்துள்ளார்.
நாமக்கல் காவேரி ஃபீட்ஸ், காவேரிஸ் பயோ புரோட்டீன்ஸ் பிரைவேட் லிமிடெட், நிர்வாக இயக்குநராக இருந்து வரும் இவர் தொழில்முறையில் பல வர்த்தக சங்கங்களின் உறுப்பினர் மற்றும் நிர்வாகம் பொறுப்பாளர், கால்நடை வேளாண் விவசாயிகள் வர்த்தக சங்கம். (LIFT) பொதுச் செயலாளர், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு.(NECC) உறுப்பினர், தமிழ்நாடு கோழிப்பண்ணை கால்நடை கூட்டமைப்பு. (TPVF) உறுப்பினர், அகில இந்திய கோழிப் பொருட்கள் ஏற்றுமதி சங்க உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளுடனும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதற்காக பிரத்யேகமான அனைத்து தமிழ் புத்தகங்களுக்கான தொண்டு ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை மேம்படுத்துவதற்கான வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பி.வி.செந்தில் அவர்களுக்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story