புனித அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு திறப்பு விழா நிகழ்வு மிக விமர்சியாக

புனித அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு  திறப்பு விழா நிகழ்வு மிக விமர்சியாக
X
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு திறப்பு விழா நிகழ்வு மிக விமர்சியாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு திறப்பு விழா நிகழ்வு மிக விமர்சியாக நடைபெற்றது தஞ்சை மறை மாவட்டம் ஆயர் சகாயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய ஆலயத்தினை திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்கு புனிதம் செய்தார் ஆயருக்கு ஆலய முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அந்தோணியார் புரம் ஐந்தாம் வீதியில் சிறுவர்கள் மலர் தூவி இறை வணக்கம் பாடல் பாடி வரவேற்பு அளித்தனர் ஆலயம் திறந்து வைத்து ஆயர் சகாயராஜ் மற்றும் முன்னாள் எம் எல் ஏ கவிதை பித்தன் மற்றும் இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தைகள் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் ஆலயத்தினுள் கும்பம் வைத்து ஆயருக்கு இறைவணக்கம் பாடல் பாடி வரவேற்பு அளித்தனர் ஆலயம் முழுவதும் ஆயர் ஜெபம் செய்து புனிதம் செய்தார் இந்த ஆலய திறப்பு விழாவிற்கு மாநகரம் முழுவதும் உள்ள ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அதனை தொடர்ந்து 2000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story