பரமத்தியில் வட்டார குலாலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா.

X
Paramathi Velur King 24x7 |20 Jan 2026 9:12 PM ISTபரமத்தியில் வட்டார குலாலர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
பரமத்திவேலூர், ஜன.19 நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் குலாலர் சங்க 50-வது பொன் விழா ஆண்டு புதிய நிர் வாகிகள் பதவி யேற்பு விழா மற்றும் சமுதாய ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல் மாவட்ட குலாலர் சங்க கல்வி அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட குலாலர் சங்கத்தலைவர் சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். பரமத்தி வட்டார குலாலர் சங்கத்தலைவர் தமிழரசன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, அப்துல் கலாம் அறிவியல் ஆலோசகர் டாக்டர். பொன்ராஜ், கலைமாமணி சிற்பி தீனதயாளன், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். புதிய நிர்வாகிகளை பதவிபிரமாணம் செய்து வைத்து சேலம்மாவட்ட மண் பானை குலாலர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வமாளிகை ராஜசேகரன் வாழ்த்துரை நிகழ்த்தினார். 50 ஆம் ஆண்டு விழா சிறப்புரையை வட்டார போக்குவரத்து அலுவலர் சென்னை சரவணன் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பரமத்தி ஒன்றிய திமுக செயலாளர்கள் தனராசு, லலித்குமார்,கபிலர்மலை மத்திய ஒன்றிய செயலாளர் சரவணகுமார்,பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, பரமத்தி பேரூர் செயலாளர் ரமேஷ்பாபு, மற்றும் மேற்குமாவட்ட ஓட்டுநர் அணி பழக்கடை காமராஜ், பரமத்தி பேரூர் பொருளாளர் நாச்சிமுத்து, வார்டு கவுன்சிலர்கள் ராஜேந்திரன்,ராமச்சந்திரன்,கீதா முருகேசன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் விக்னேஸ்வரன், துணை அமைப்பாளர்கள் கோபி, ரமேஷ், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் குலாலர் சங்க பொறுப்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். முப்பெரும் விழா ஏற்பாடுகளை பரமத்தி வட்டார குலாலர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story
