திமுக தொண்டரின் இலவச பொங்கல் தொகுப்பு பொதுமக்கள் வாங்காததால் அதிர்ச்சி

X
Nagapattinam King 24x7 |21 Jan 2026 12:38 PM ISTதலைஞாயிறு செய்தி
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஓடாச்சேரி கிளை செயலாளராக இருப்பவர் ஆர்.எல்.ஜெயசங்கர் இவர் திமுக தீவிர தொண்டராகவும் இருந்து வருகிறார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் 2026 -ல் மீண்டும் முதல்வராக வேண்டியும் திருச்சந்தூர் ஸ்ரீ முருகன் கோவிலுக்கு 108 நாள் விரதமிருந்து 108 பால்குடத்துடன் செல்வதாகவும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கௌதமன் மற்றும் ஒன்றிய செயலாளர் மகா.குமார் ஆகியோரிடம் முறைபடி அனுமதி வாங்கியும் அழைப்பு கொடுத்தும் இருவரும் வராமல் புறக்கணித்தனர்.இதனால் திமுக தொண்டர் ஜெய்சங்கர் மனமுடைந்து கண்ணீருடன் மேடையிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றனர்.
Next Story
