புதுக்கோட்டை காங்கிரஸ் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற பெர்நெட் அந்தோணிராஜ் கட்சி நிர்வாகிகளுடன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
புதுக்கோட்டை காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற பெர்நெட் அந்தோணிராஜ் கட்சி நிர்வாகிகளுடன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசித்து வரும் பெர்னெட் அந்தோணிராஜ் இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் சொத்து பாதுகாப்பு மீட்பு குழு உறுப்பினர் மற்றும் ஊடக பிரிவு செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இவருக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவராக பதவி வழங்கி அறிவித்தனர் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பரிந்துரையின்படி இந்த பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது மாநகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுடன் ஒன்றிணைந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story