வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக செயல்படுவேன். காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட புதிய தலைவர் ரமேஷ் அறிவிப்பு.
Karur King 24x7 |21 Jan 2026 1:47 PM ISTவரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக செயல்படுவேன். காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட புதிய தலைவர் ரமேஷ் அறிவிப்பு.
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக செயல்படுவேன். காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட புதிய தலைவர் ரமேஷ் அறிவிப்பு. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ந்து அறிவிப்பு செய்து வருகிறார்கள். இதற்கு ஏற்றார் போல் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என தலைமை விரும்பியதால் தமிழக அளவில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் கரூர் மேற்கு வட்டார தலைவராக பணியாற்றி வந்த ரமேஷ் என்ற இளைஞரை கரூர் மாவட்ட தலைவராக கட்சி தலைமை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் கமிட்டி கரூர் மாவட்ட பொறுப்பாளர் பழனிசாமி தலைமையில் ரமேஷ் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் முழு உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர் ரமேஷுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குவேன் என தெரிவித்தார்.
Next Story




