ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி...

X
Rasipuram King 24x7 |21 Jan 2026 8:11 PM ISTராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி...
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு சாலை விதிகளின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில், 2026 தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் எம். பதுவைநாதன் உத்தரவின் பேரில், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், சாலை விதிகளை கடைப்பிடிப்பது, சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைகவசம் அணிய வேண்டும், வாகன ஓட்டுநர் உரிமம், சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் செய்கைகள் விழிப்புணர்வு நடனங்கள் மூலம் விளக்கப்பட்டன. தொடர்ந்து, மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர், நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், ராசிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நடராஜன், ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் மனோகரன், நெடுஞ்சாலை துறை உதவிக் கோட்ட பொறியாளர் வ.கு. ஜெகதீஸ்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
