வாக்காளர்கள் சிறப்பு முகாம்

வாக்காளர்கள் சிறப்பு முகாம்
X
குமாரபாளையம் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து, வாக்காளர்கள் விண்ணப்பங்கள் பரிசீலித்து பதிவு செய்யப்படுகின்றன.
குமாரபாளையம் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து, வாக்காளர்கள் விண்ணப்பங்கள் பரிசீலித்து பதிவு செய்யப்படுகின்றன. ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் இரு நாட்களாக நடந்தது. இந்த முகாமில் புதிய வாக்காளர் பதிவு, முகவரி மாற்றம் ஆகிய செய்து தரப்பட்டன. குமாரபாளையம் பகுதியில் உள்ள வாக்காளர்கள் தங்கள் ஓட்டு சம்பந்தமாக மாற்றம் இருந்தால் தெரிவிக்க கோரி, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விண்ணப்பம் செய்த வாக்காளர்கள் தெரிவித்த குறைகள் நிவர்த்தி செய்து கொடுக்கப்பட்டன. பாகம் எண்.23ல் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் நடந்தன. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் சுகுமார், சண்முகம், சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர். பட்டியலில் பெயர் வரப்பெற்றவர்களிடம் ஒப்புகை படிவத்தில் கையொப்பம் பெறப்பட்டது.
Next Story