கரூரில் நடைபெற்ற ஒன்பதாவது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வீரர்கள் உற்சாகம்.
Karur King 24x7 |22 Jan 2026 2:00 PM ISTகரூரில் நடைபெற்ற ஒன்பதாவது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வீரர்கள் உற்சாகம்.
கரூரில் நடைபெற்ற ஒன்பதாவது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வீரர்கள் உற்சாகம். கரூர் டெக்ஸ்சிட்டி கழகமும் கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகமும் இணைந்து நடத்திய ஒன்பதாவது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டிகளை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தமிழக முழுவதும் இருந்து, 16 ஆண்கள் அணி, 12 பெண்கள் அணி என மொத்தம் 28 அணிகள் பங்கேற்கின்றன. முதலாவதாக பெண்களுக்கான நாக் அவுட் போட்டியில் சென்னை எத்திராஜ் கல்லூரி அணியும் கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணியும் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் தொடர்ந்து கோவை பிஎஸ்ஜி அணி அதிக புள்ளி எடுத்த வண்ணம் இருந்த்து. வெற்றி பெறும் முனைப்போடு இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்ற முறையில் ஆடிய ஆட்ட இறுதியில், 42:28 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணி எத்திராஜ் கல்லூரி அணியை வென்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு கூடைப்பந்து கழகம் சார்பில் நினைவு பரிசுகளும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story







