குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி
Kulithalai King 24x7 |22 Jan 2026 5:46 PM ISTபோதை ஒழிப்பு குழு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி போதை ஒழிப்புக் குழு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கல்லூரி முதல்வர் சுஜாதா தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னதாக மாணவர்களிடையே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறியும் மாணவர்கள் போதைப் பொருட்களில் இருந்து எப்படி விலகி இருப்பது என்பது குறித்த கருத்துக்களை மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு கூறினார். இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி அய்யர்மலை கடைவீதி, கோவில் வளாகம் என முக்கிய வீதிகள் வழியாக சென்று மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகை ஏந்தி கொண்டு முழக்கங்களை எழுப்பி கொண்டு பேரணியாக சென்றனர். இதற்கான ஏற்பாட்டினை நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைரமூர்த்தி, நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விலங்கியல் துறை தலைவர் பாபுநாத். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் வெங்கடேசன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story




