கரூர் செல்வ நகரில் செல்வ மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
Karur King 24x7 |23 Jan 2026 1:10 PM ISTகரூர் செல்வ நகரில் செல்வ மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
கரூர் செல்வ நகரில் செல்வ மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் செல்வ நகர் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் செல்வ மாரியம்மன் கோவிலில் பரிவார மூர்த்திகளான ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கருப்பண்ணசாமி சிலைகள் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடி சந்தானம், மகா பூர்ணாவதி, தீபா ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்திற்கு மேளதாளங்கள் முழங்க எடுத்துச் சென்று சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் மந்திரங்களை உச்சாடனம் செய்து புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா, திமுக 17 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பசுவை சக்திவேல், ஊர் நாட்டான்மை குமார்,கோவில் பூசாரி முருகேசன் உள்ளிட்ட கும்பாபிஷேக விழா கமிட்டி நிர்வாகிகள் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story






