நெல் வயல்களில் அறுவடை துவக்கம்

நெல் வயல்களில் அறுவடை துவக்கம்
X
குமாரபாளையம் அருகே நெல் வயல்களில் அறுவடைப்பணி துவங்கி நடந்து வருகிறது
குமாரபாளையம் அருகே மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் பாசனம் மூலம் பலன் பெறும் 10 ஆயிரத்திற்கும் மேலான ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது. இதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி, குமாரபாளையம் நகராட்சி, சமயசங்கிலி, கலியனூர், உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் நீர் பாய்ச்சி பயன் பெற்றனர். இதன் அறுவடை காலம் வந்ததால், நேற்றுமுன்தினம் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் அறுவடைப்பணிகள் துவக்கியுள்ளனர். இதற்காக நெல் அறுவடை செய்யும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, ஆங்காங்கே விவசாய நிலங்களில் நெல் அறுவடைப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம், அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை என்ற சூழ்நிலை தவிர்க்கப்பட்டுள்ளது என விவசாயிகள் கூறினார்கள்.
Next Story